நோக்கம்

பதிவு

உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆய்வு மையங்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்து தமிழ் வளர்த்து வருகின்றனர். இத்தகு தமிழ் வளர்க்கும் நிறுவனங்களின் விவரங்களைத் தொகுத்தல் மற்றும் பதிவு செய்தல்.

தொகுப்பு

உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறை, இலக்கியப் பணி ஆகியவற்றைத் தொகுத்து வழங்குதல்.

கலை

தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான சிற்பங்கள், நுட்பம் வாய்ந்த ஓவியங்கள், நாடகங்கள், நாட்டுப்புறக்கலைகள் ஆகியவற்றை அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் உய்த்துணர வாய்ப்புகளைச் சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தித் தருதல்.

கூட்டமைப்பு

தமிழ் அமைப்புகள் அனைத்தையும் ஒருகுடையின் கீழ் பதிவு செய்து, ஒருங்கிணைத்து, கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுதல்

களஞ்சியம்

உலகத் தமிழர் பற்றிய களஞ்சியம் தயாரித்து வெளியிடுதல்.

ஆராய்ச்சி

உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், தமிழ்மொழி பற்றி ஆராய்ச்சி மையம் அமைக்க உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

நிகழ்வுகள்

உலக நாடுகளில் தமிழர் வாழும் இரண்டு நாடுகளை ஒவ்வோர் ஆண்டும் தேர்வு செய்து அந்நாடுகளில் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்தல்.

பரப்புரை

இலக்கியம், பண்பாடு, தமிழ்மொழி பற்றிய செய்திகளை உலக நாடுகளிலெல்லாம் பரவச் செய்தல்.

உதவி

பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் காரணங்களால் பல நூறாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் குடியேறிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பிஜி, மொரிசியசு, பிரெஞ்சு கயானா மற்றும் தற்போது குடியேறிய நாடுகளான அமெரிக்கா, பிரான்சு , ஆசுதிரேலியா, நியூசிலாந்து, குவைத் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான உதவிகளை அளித்தல்.

அடையாளம்

தமிழர் இலக்கியங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல்.

Connect With Us

மருத்துவர் தங்கராசு சாலை, சட்டக் கல்லூரி அருகில், மதுரை – 625020

Ulaga Tamil Sangam, Madurai © 2024. All Rights Reserved