கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் இன்று( 06.02.2025) தமிழ்வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்.ஒளவை அருள், குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், குமரகுரு பன்முகக் கலைஅறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.விஜிலா எட்வின் கென்னடி, தமிழ்த் துறை ஆலோசகர் மரபின் மைந்தன் முத்தையா, தமிழ் படைப்பாக்கத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.சா.மரகதமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.