“உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி(த), மதுரை
இணைந்து நடத்தும்
தமிழ்க்கூடல் – 147
அழைப்பிதழ்
திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழி – 18
நாள்: 02.01.2025 (வியாழன்) நேரம்: முற்பகல் 10.30 மணி நிகழிடம் : கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
வரவேற்புரை
முனைவர் சு. சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தலைமை
முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள்
இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
முன்னிலையுரை
முனைவர் த. முனிப்பாண்டியம்மாள் அவர்கள் கௌரவ விரிவுரையாளர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (த), மதுரை
தமிழ்க்கூடலுரை
‘பண்டைய கொரிய, தமிழக உறவுகள் – தொல்லியல், இலக்கிய ஒப்பீட்டாய்வு’
முனைவர் செ.ஆரோக்கியராஜ் அவர்கள் உதவிப் பேராசிரியர், உயிர் தொழில்நுட்பத்துறை, சேஜோங் பல்கலைக்கழகம், தென்கொரியா
நன்றியுரை
முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
அனைவரும் வருக!
மதுரைஉலகத் தமிழ்ச் சங்கமும் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியும் இணைந்து நடத்தும் ‘தமிழ்க்கூடல்; நிகழ்வு 02.01.2025அன்று முற்பகல் 10.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்டவளாகக் கூட்டஅரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்விற்குஉலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ) முனைவர் ஒளவை அருள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
அவர்தம் உரையில்,
“தமிழ்மொழிக்கும் கொரிய மொழிக்கும் ஒற்றுமை உள்ளது.
முனைவர் செ.ஆரோக்கியராஜ் அவர்கள் நுண்ணுயிரியியல் துறையில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர்.
இத்துறை மிக நுணுக்கமானது.
இதில் பயில்பவர்களின் நோக்கும் போக்கும் மிகக் கடினமானது.
தமிழகத்துக்கும் கொரியாவுக்கும் இடையிலான மரபு, மொழி, இன ஒற்றுமைகளைக் கண்டு அவர் முறையாக ஆவணப்படுத்தி இருக்கின்றார்.
ஆய்வறிக்கையாக வெளியிட்டு விழிப்படையச் செய்திருக்கிறார்.
ஒரு மன்னரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்திருப்பது கொரியாவில் மட்டும்தான்.
சேஜோங் பல்கலைக்கழகம் அவ்வாறு அமைந்ததுதான்.
நமது முதல்வர் அவர்கள் ஆணையின்பேரில் அயலகத் தமிழறிஞர்களுக்கென ஜனவரி 12ஆம் நாளன்று அயலகத் தமிழர் நாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழக அரசுக்கு இதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத் தமிழ்ச் சங்கத்தில் அயலகத் தமிழறிஞர்களுக்கென இலக்கியம், இலக்கணம், மொழியியல் துறையில் சிறந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
முனைவர் ஆரோக்கிய ராஜ் மொழியியலுக்கென விருதைப் பெற்றவர்.
கொரியாவின் கணினிப் பொறியாளர் பீ. சகாயடர்சியூஸ் அவர்கள் திருக்குறளையும் மணிமேகலையையும் கொரிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
அதைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நூலாக வெளியிடவுள்ளது.
சென்னையில் கொரியப் பள்ளிகளும் உணவகங்களும் இருக்கிறது.
கொரியாவின் பாப்பிசை இளந்தமிழர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது”என்றுகுறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் கௌரவவிரிவுரையாளர் முனைவர் த.முனிப்பாண்டியம்மாள் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தென்கொரியாவின் சேஜோங் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் அவர்கள் ‘பண்டைய கொரிய, தமிழக உறவுகள்-தொல்லியல், இலக்கிய ஒப்பீட்டாய்வு’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார்;.
அவர்தம் உரையில்
, “வறுமையில் இருந்த கொரிய நாடு வளமிக்கதாக மாற கல்விதான் காரணமாக இருந்தது.
தென்கொரியாவில் 60 விழுக்காட்டிற்கும் மேம்பட்டவர்கள் மதம் இல்லை என்கின்றனர்.
மதத்தை அடையாளப்படுத்துவதில்லை.
மொழிதான் மனிதனை அடையாளப்படுத்தும்.
தமிழை வைத்துத்தான் தமிழர்களை அடையாளப்படுத்துவர்.
உலகின் தலைசிறந்த எட்டுப் பல்கலைக்கழகங்கள் கொரியாவில் உள்ளன.
உயர்நிலைக் கல்வி பயில சிறப்பான நாடு கொரியாவாகும்.
2500 தமிழர்கள் இங்கு உள்ளனர்.
மாவொளி, சொக்கப்பனை, பொங்கல் விழா ஆகியவையும் பொங்கல், கொழுக்கட்டை, எள்ளுருண்டை ஆகியவை உணவுசார்ந்தும் முதுமக்கள்தாழி, மண்பாண்டங்களில் எழுதுதல் முதலியவை தொல்லியல் சார்ந்தும் கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான ஒற்றுமையாக உள்ளன.
உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், அம்மா, அப்பா, நான், கற்பித்தல், விவசாயம், கிறுக்குதல், அறிவிலி ஆகிய சொற்கள் சார்ந்தும் மொழி ஒற்றுமையும் உள்ளன.
உச்சரிப்பு, சொற்கள் ஒற்றுமை, எழுத்து ஒற்றுமை ஆகியவற்றை எனது ஆய்வுக்கட்டுரையில் பதிவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையர் முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்குத் தமிழறிஞர்கள், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.